Breaking News

மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் - துணைவேந்தர் இயக்கி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம், நவ.29:

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீனமயமான எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை கல்லூரியின் துணைவேந்தர் ஸ்ரீதர் வெள்ளிக்கிழமை இயக்கி தொடங்கி வைத்தார்.



காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீனமயமானதும் மேம்படுத்தப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் இயக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கல்லூரியின் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இணைவேந்தர்கள் ஆகாஷ் பிரபாகர்,கிருத்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜசேகர் வரவேற்று பேசினார்.துணைவேந்தர் ஸ்ரீதர் மேம்படுத்தப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.மருத்துவர் ஜெய்கணேஷ் வரவேற்று பேசினார்.

கல்லூரியின் கதிரியக்கவியல்பிரிவு துணைத் தலைவர் சுந்தர்ராஜன் எம்ஆர்ஐ இயந்திரத்தின் நோய் அறியும் திறன் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர்கள் ஈஸ்வரி, முத்துலட்சுமி, நிலைய மருத்துவர் ராதா ஆகியோர் உட்பட மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக கல்லூரியின் கண்காணிப்பாளர் பூபதி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments