டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், டிச.4:
விழுப்புரம் மாவட்டத்தில் பென்ஜால் புயலால் ஏற்பட்ட சேதத்தில் உயிரிழந்த குண்டப்புலியூர் விற்பனையாளர் ஆர்.சக்திவேல் குடும்பத்துக்கு ரூ.50லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்,அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,
இயற்கை பேரிடர் காலங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்,ஊழியர் விரோதப் போக்கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் இ.பிரகாசம், மேற்பார்வையாளர் சங்க மாவட்ட தலைவர் அருணகிரி ஆகியோர் உட்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments