Breaking News

காஞ்சிபுரத்தில் ஓய்வூதியர் தின விழா

காஞ்சிபுரம், டிச.26-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை ஓய்வூதியர் தின விழா பல்லவன் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஓய்வூதியர் தின விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் வி.ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் டி.உத்தமராஜன்,எம்.ராஜேந்திரன்,ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க மாவட்ட தலைவர் எம்.சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் மு.பிச்சைலிங்கம் வரவேற்று பேசினார்.விழாவில் ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை முன்னாள் மாநில தலைவர் இ.ராஜேந்திரனும், சங்க சிறப்பான செயல்பாடுகள் குறித்து மாநில பொருளாளர் இ.திருவேங் கடமும் பேசினார்கள்.

சங்கத்தின் மாநில மதிப்புறு தலைவர் கே.கங்காதரனின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். 

விழாவில் மாவட்டக் கருவூல அலுவலர் ஏ.அருள்குமார்,முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.ஜி. செல்வமணி,கால்நடைத்துறை இணை இயக்குநர்(ஓய்வு)வி.பன்னீர் செல்வம் உட்பட பலரும் பேசினார்கள். 

நிறைவாக சங்க இணைச் செயலாளர் எஸ்.வளர்மதி நன்றி கூறினார்.முன்னதாக சங்கக் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

No comments

Thank you for your comments