Breaking News

அசகவுரியத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் - மதிமுக மல்லை சி ஏ சத்யா உருக்கம்

கண்ணுக்குத் தெரியாத சமூக விரோத சைபர் க்ரைம் குற்றவாளிகளின் இது போன்ற செய்கையை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாராபட்ச மற்ற கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் . 

என் தவறின் காரணமாக ஏற்பட்ட அசகவுரியத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்...   என்று மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சி ஏ சத்யா தெரிவித்துள்ளார். 



மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சி ஏ சத்யா அறிக்கையில், 

புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம் 

டிசம்பர் 03 இரவு 9 30 மணியளவில் என்னுடைய வாட்ஸ்அப் எண் 9786428229 ஒரு அழைப்பு ஆங்கிலத்தில் பேசினார் ஆப்பிரிக்க ஆங்கில உச்சரிப்பு டிசம்பர் 04 கணொளி கூட்டத்திற்கானா  OTP என் அனுப்பி உள்ளேன் பார்த்துச் சொல்லச் சொன்னார் சொன்னேன் நாளை அழைக்கின்றேன் என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது 

சற்று நேரத்தில் என்னுடைய வாட்ஸ்அப் துண்டிக்கப்பட்டது மீ்ண்டும் தொடர்பு எடுக்க முயற்ச்சித்தேன் முடியவில்லை 

இந்நிலையில் என்னுடைய வாட்ஸ்அப் என்னிலிருந்து உதவி கேட்டு தகவல் அனுப்பி உள்ளனர் டிசம்பர் 04 காலையிலிருந்து என்ன பிரச்சினை என்ன ஆச்சு என்று வரும் அழைப்புகள் அதை உறுதி படுத்தியது 

இது நாள்தோறும் ஊடகங்களில் நாம் பார்க்கும் சைபர் க்ரைம் குற்றவாளிகளின் வேளை எனவே யாரும் சம்மந்தப்பட்ட எண்ணிற்கு உதவிகள் வழங்கிட வேண்டாம் என்று என்னுடைய வேறு ஒரு வாட்ஸ்அப் இருந்து வேண்டு கோள் வைத்து விட்டு அந்த வாட்ஸ்அப் எண்ணெய் துண்டிப்பதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை 

டிசம்பர் 05 மதுரை திருமண விழாவில் பங்கேற்க டிச 04 இரவு ரயில் பயணம் காலையில் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி லாக் செய்ய முயற்சி செய்தும் பயணளிக்க வில்லை 

இந்நிலையில் கழகத் தோழர்கள் மூவர் மரணம் இரவு தொடர் வண்டி எடுத்தால் இறுதி அஞ்சலியில் பங்கேற்க முடியாது சிறமங்கள் இருப்பினும்  மதுரையில் இருந்து பகல் 1 40 இன்டிகோ விமானம் மூலம் பயணம் செய்து பிற்பகல் 3 மணியளவில் சென்னை வந்து சேர்ந்து போக்குவரத்து நெரிசலில் செங்கல்பட்டு வ மாவட்ட கழக பொருளாளர் சகோதரர் மாங்காடு முருகன் MC அவர்களின் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு 

தென் சென்னை மே மாவட்ட கழக பொருளாளர் சகோதரர் திரு பீடாகடை ரவி பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் 

திருவள்ளூர் நகர் கழக செயலாளர் சகோதரர்  திரு மணியரசன் அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாதா சூழல் காரணம் மூன்று மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு விட்டது 

இந்நிலையில் என் வாட்ஸ்அப் சைபர் கிரைம் குற்றவாளிகள் HAKE செய்தவர்கள் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் நான் பிரச்சினையில் உள்ளேன் உதவி கோரி தகவல் அனுப்பி உள்ளனர் அதைப் பார்த்த பலரும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த வண்ணம் இருந்தனர் 

இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு சைபர் கிரைம் மாநில தலைமை அலுவலகத்திற்கு இரவு 8 மணியளவில் சென்று ஆய்வாளர் திரு ராஜ்குமார் அவர்களிடம் முறையிட்டேன் போர்கால அடைப்படையில் இயங்கி இளம்  தொழில்நுட்ப காவலர்களை உதவிட அறிவுறுத்தியதால் அவர்கள் துரிதமாக செயல்பட்டு புகரைப் பதிவு செய்து டிசம்பர் 3 இரவு 9 30 மணியில் இருந்து என் வாட்ஸ்அப் HAKE செய்து தவறான தகவல்களை பரப்பி வந்ததை தடுத்து நிறுத்தி என்னுடைய வாட்ஸ்அப் சரிசெய்து கொடுத்தனர் மாநில சைபர் கிரைம் காவல் துறைக்கு நன்றி 

நண்பர்கள் யாராவது சைபர் கிரைம் குற்றவாளிக்கு பணம் அனுப்பி இருந்தால் ஆதாரத்துடன் கொடுத்தால் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்  

சைபர் கிரைம் குற்றவாளிகள் அனுப்பிய தகவலைப் பார்த்து பதட்டத்துடன் அழைத்து நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி 

கண்ணுக்குத் தெரியாத சமூக விரோத சைபர் க்ரைம் குற்றவாளிகளின் இது போன்ற செய்கையை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாராபட்ச மற்ற கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும் 

என் தவறின் காரணமாக ஏற்பட்ட அசகவுரியத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்...   என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்...  

இவ்வாறு  மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சி ஏ சத்யா தெரிவித்துள்ளார். 

 

No comments

Thank you for your comments