Breaking News

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம், டிச.15:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளையும்,அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவும் இணைந்து தன்னார்வ ரத்ததான முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தினார்கள்.


காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள பிடிவிஎஸ் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும்,அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கிப்பிரிவும் இணைந்து தன்னார்வ ரத்ததான முகாமை நடத்தினார்கள்.முகாம் தொடக்க விழாவிற்கு ஜமாஅத் கிளை தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார்.கிலையின் செயலாளர் யூசுப்,துணைச் செயலாளர்கள் அன்சாரி,அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் பாசில் வரவேற்று பேசினார்.

ரத்ததான முகாமை மாவட்ட மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன் கலந்து கொண்டு தொடக்கி வைத்து பேசுகையில் நிகழாண்டு மட்டும் இதுவரை சாதி,மத பேதமில்லாமல் அனைத்து சமுதாய மக்களுக்கும் அவசர கால உதவிக்காக 1312 யூனிட்டுகள் கிலையின் சார்பில் ரத்ததானம் செய்துள்ளதாக பேசினார்.

முகாமில் 81 நபர்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலர் தாமரை நங்கை தலைமையிலான மருத்துவமனை பணியாளர்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கு ரத்த வங்கி அலுவலர் தாமரை நங்கை,காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அஸ்மாபேகம் சாகுல்ஹமீது, இலக்கியா சுகுமார் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். 

அதிக ரத்ததான முகாம்கள் நடத்துவதற்கு உதவியாக நடமாடும் ரத்ததான வாகனம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரவும்,தலைமை மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்தவும் வேண்டும் எனவும் தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments