Breaking News

காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம்,டிச.15:

காஞ்சிபுரம் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாள் விழா உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ.யுவராஜ்,மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் எம்எஸ்.சுகுமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் நாத்திகம் நாகராசன் வரவேற்று பேசினார்.

விழாவில் கலைஞர்கள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள் ஆகியோருக்கு எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியிலிருந்து புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்ட கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தியவாறு ஊர்வலமாக வந்து விழா நடைபெறும் கலைஞர் பவளவிழா மாளிகைக்கு வந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் சு.முரளீதரன் நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments