Breaking News

இடிந்து விழும் அபாய நிலையில் ராகவேந்திரா நகர் நியாயவிலைக்கடை

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராகவேந்திரா நகரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராகவேந்திரா நகரில் நியாயவிலைக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் திருப்பருத்திக்குன்றம், ராகவேந்திரா நகர், அருணாச்சலம் நகர் உட்பட மொத்தம் 950 குடும்ப அட்டைதார்கள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். 

இந்த நியாயவிலைக்கடையின் மேற்கூரை தொடர் மழையாலும், பழமையான கட்டிடமாக இருப்பதாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்து வருகிறது.

கட்டிடத்தின் மேற்கூரை மழை பெய்து மேலும் சேதமாகி விடாமல் இருக்கவும், மழை நீர் கட்டிடத்துக்குள் ஒழுகாமல் இருக்கவும் பணியாளர்கள் மேற்கூரையை மஞ்சள் நிற தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருப்பதுடன் அச்சத்துடனேயே பணியாற்றி வருகின்றனர்.

நியாயவிலைக்கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்கள், பொதுமக்கள் பலரும் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

எனவே சேதமைடந்துள்ள இக்கடையை இடித்து விட்டு புதிய கட்டிடத்தில் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

No comments

Thank you for your comments