உழவர் சந்தையில் குவிந்த சாம்பல் நிற பூசணிக்காய்கள்
காஞ்சிபுரம், டிச.2:
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் காஞ்சிபுரம் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படத் தொடங்கியிருக்கிறது.
உழவர் சந்தையில் உள்ள பரிவர்த்தனைக் கூடத்தை நாள் ஒன்றுக்கு ரூ.250ம், மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு பலா, வாழை, தேங்காய், காய்கறிகள், தர்ப்பூசணிக்காய்கள், கீரை வகைகள் ஆகியன விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை திடீரென உழவர் சந்தைக்கு சாம்பல் நிற பூசணிக்காய்கள் விற்பனைக்காக அதிக அளவில் வந்து குவிந்தன.
இது குறித்து வேளாண் வணிகத்துறையின் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் நா.ஜீவராணி கூறுகையில்
சாம்பல் நிற பூசணிக்காய்கள் உழவர் சந்தைக்கு மொத்தமாக 15 டன்னுக்கு மேலாக விற்பனைக்கு வந்துள்ளன. மொத்தமாக வேளாண் விளை பொருட்களை பயிர் செய்யும் விவசாயிகள் தங்களது பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யவும், மழை மற்றும் வெயிலிலிருந்து பொருட்களை பாதுகாக்கவும் உழவர் சந்தையில் உள்ள பரிவர்த்தனைக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பௌர்ணமி, அமாவாசை, மூகூர்த்த தினங்கள், விழா நாட்கள் ஆகியனவற்றில் சாம்பல் பூசணிகள் அதிக அளவில் விற்பனைக்கு வருவதாகவும் நா.ஜீவராணி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments