காஞ்சிபுரத்தில் உலக இசை தின விழா
காஞ்சிபுரம், டிச.17:
கலை பண்பாட்டுத்துறையும், காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளியும் இணைந்து குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கில் உலக இசை தின விழாவை நடத்தினார்கள்.தொடக்க விழாவிற்கு கோயில் செயல் அலுவலர் கா.கேசவன் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மன்றத்தின் நிறுவனர் கு.ராமலிங்கம், ஆடலரசு ஓதுவார், கதிர்வேல் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிவராஜபதி ஓதுவார் வரவேற்று பேசினார்.
விழாவில் நாதசுவர வித்வான் எம்கேஎஸ் நடராஜன் நாதசுவர இசையின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.இதனை தொடர்ந்து திருச்சி குமாரவயலூர் பாலச்சந்திர ஓதுவார் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக தவில் ஆசிரியர் ரகுராமன் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியை ரமணி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments