காஞ்சிபுரத்தில் ரூ.254 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைப் பணிகள் - ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம், நவ.30:
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மக்கள் தொகை ரூ,2,76,360 பேர்.மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளிலும் உள்ள சாலைகளின் நீளம் 361.76 கி.மீ.கடந்த 1975 ஆம் ஆண்டு ரூ.134 கோடி மதிப்பில் 33 வார்டுகளில் பாதாள சாக்கடைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு 17.06 கோடி மதிப்பில் 64 கி.மீ.தூரத்திற்கு கழிவு நீர் குழாய்களும்,1152 மனித ஆய்வுக் குழிகள்,6 கழிவு நீரேற்றும் நிலையம்,4 கழிவு நீருந்து நிலையம் மற்றும் திருக்காலிமேட்டில் 1471 எம்எல்டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட 18 வார்டுகளிலும் ரூ.254 கோடி மதிப்பில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகளை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லப்பா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பணிகளை விரைந்து முடிக்குமாறும் மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ஆட்சியரது ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் கணேசன்,உதவிப் பொறியாளர் பன்னீர் செல்வம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments