Breaking News

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர்மான ER.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது!

கோவை மாவட்டம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளர்மான ER.ஈஸ்வரன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இ.ஆர் ஈஸ்வரன் மாநில மாவட்ட நிர்வாகிகளை இடையே சிறப்புரையாற்றினார்.



இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக பொள்ளாச்சியை தலைமை இடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்,தென்னை மரம், பனை மரங்களிலிருந்துகள் இறக்கிட அனுமதி வழங்கி கள்ளச்சாராயம் மரணங்களை குறைத்திட வேண்டும்,விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் பெட்ரோல் டீசல் விலைகளை மத்திய அரசு கணிசமாக குறைத்து விட வேண்டும்,விலைவாசி உயர்வுக்கு இன்னொரு காரணமாக உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை மறு ஆய்வு செய்திட வேண்டும், உள்நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் அரசு மானியத்துடன் வழங்கி தென்னை விவசாயிகளை காத்திட வேண்டும், ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு முறையை தவிர்க்க மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் முன்வர வேண்டும்,பொள்ளாச்சியை சேலம் ரயில்வே கோட்டத்துடன் இணைக்க வேண்டும்,கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் பொள்ளாச்சியை சேர்த்திடவும் கோவை நீலம்பூரிலிருந்து சென்னை ஆண்டவர் கோவில் வரையும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சியில் கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் மழைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் குறைகளை கண்டறிந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசு அறிவித்தபடி கறிவேப்பிலை தொழிற்சாலை அமைத்திட வேண்டும் சிறுகுறு தொழில்களுக்கான தொழில் பேட்டையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்,விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு தீர்வு காண வேண்டும்,கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் விசைத்தறிக்கு ஜவுளி சந்தை உருவாக்கிட வேண்டும், மேட்டுப்பாளை யத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட 29 முக்கிய அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மேலும் கோவை மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 40 கோடி மதிப்பில் மாஸ்டர் பிளான் அமைத்து பேஸ் 1 பணிகள் துவங்கப்பட்டுள்ளது மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பல்வேறு முயற்சிகளால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொதுக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது .



இந்நிகழ்ச்சியில் மாநில தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்வேல்,மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் நித்தியானந்தம், மாநிலத் துணை இளைஞரணி செயலாளர் சங்கனூர் பிரேம், மாநில விவசாய அணி செயலாளர் கோபால்சாமி, மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் துரை, வடிவேல், மாவட்ட செயலாளர்கள் பிரீமியர் செல்வம், தனபால், குழந்தைவேலு,வைரவேலு,வக்கீல் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ரமேஷ், வீரன் தொழிற்சங்க பேரவை மாநில துணைத்தலைவர் ஐயா சாமி மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments