Breaking News

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் மூட நம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம்

காஞ்சிபுரம், நவ.10:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாத்தில் இல்லாத மூட நம்பிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.


காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் சார்பில் இஸ்லாத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். கிளையின் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் அஷரப் அலி,துணை செயலாளர் ஆசிப்சலாம்,மருத்துவ அணியின் செயலாளர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சிபுரத்தில் ஒலிமுகம்மது பேட்டை,ஹதர் பேட்டைதெரு, அல்லாபாத் ஏரி, மளிகை செட்டி தெரு, இரும்புக்கடை சந்து உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று முஸ்லிம்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

அமைப்பின் மாநில செயலாளர் அப்துல் முஹ்சீன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தைக் கண்டித்து சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்து பேசினார்.

No comments

Thank you for your comments