Breaking News

08.11.2024 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு

காஞ்சிபுரம் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் 08.11.2024 வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. 

அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக்நகர், ஏனாத்தூர், வையாவூர், இந்திராநகர் மற்றும் 33/11 கே.வி வேளியூர் மற்றும் 33/11 கே.வி வையாவூர்  துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் 08.11.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும். 

இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் /  வடக்கு கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


 


 

No comments

Thank you for your comments