Breaking News

தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா!

கோவை ரயில்நிலையம் பகுதியில் தென்னிந்திய திருமண அமைப்பாளர்கள் சங்கம் சார்பில் நிறுவன தலைவர் பி.என் சுந்தரம்பிள்ளை 74வது பிறந்தநாள் விழா, மாதாந்திர பொதுக்குழு மற்றும் ஜாதக பரிவர்த்தனை என முப்பெரும் விழா கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர்  தலைமையில் நடைபெற்றது.



அனைத்து திருமண அமைப்பாளர்கள் ஒருங்கிணைந்து 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது மாநாட்டில் திருமணப் பதிவின் போது இரு வீட்டருக்கும் திருமண அமைப்பாளர்கள் கையெழுத்திடும் வகையில் மத்திய மாநில அரசுகள் வழிவகை செய்ய மேண்டுமென்று  பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.முன்னதாக நிறுவனத் தலைவர் சுந்தரம்பிள்ளைக்கு சால்வை அணிவித்து அன்பளிப்புகள் வழங்கி 74வது பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி நிர்வாகிகள் அனைவரும் கொண்டாடினார்கள் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநிலத்தலைவர்  சக்திவேல்,மாநில பொதுசெயலாளர் தனபால்,துணைத்தலைவர் டி.எம்குமார், பொருளாளர் ஆனந்த்,செயலாளர் ரவி ராஜா,பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் மற்ற மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த திருமண அமைப்பாளர்கள் மற்றவர்க ளோடு ஆண் பெண் ஜாதகங்களை பரிமாற்றி கொண்டு தங்களது அனுபவங்களை பரிமாறிக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments