Breaking News

காஞ்சிபுரம் அருகே ரூ.1.33லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது

காஞ்சிபுரம், நவ.21:

காஞ்சிபுரம் அருகே பொன்னியம்மன் பட்டரை பகுதியில் பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு ரூ.1.33லட்சம் மதிப்புள்ள 149 கிலோ குட்கா பொருட்களை வியாழக்கிழமை கடத்தி வந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



காஞ்சிபுரம் அருகே பொன்னியம்மன் பட்டரை என்ற இடத்தில் பாலுசெட்டி சத்திரம் போலீஸôர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா 149 கிலோ இருந்ததையும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

149 கிலோ குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.133,968.விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தை சேர்ந்த உமாநாத்சிங்(42)சாந்திலால்(41) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments