பள்ளி மாணவியை விபத்திலிருந்து காப்பாற்றிய காவலர் - குவியும் பாராட்டுகள்
கோவை மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக செல்வ கணேஷ் (PC-1684) பணிபுரிந்து வருகிறார். இவர் சூலூர் காவல் நிலையத்தில் அயல் பணியாக போக்குவரத்து காவலராக பணியில் உள்ளார்.
இன்று (05.11.2024) காலை திருச்சி ரோடு கலங்கள் சந்திப்பில் உள்ள சிக்னலில் சாலையை கடக்க முயன்ற பள்ளி மாணவி மீது லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட இருந்த நிலையில் அவ்விடத்தில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் செல்வகணேஷ் துரிதமாக செயல்பட்டு விபத்திலிருந்து பள்ளி மாணவியை காப்பாற்றி உள்ளார்.
இந்நிலையில் சாலை விபத்திலிருந்து பள்ளி மாணவியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ஆயுதப்படை காவலரின் நற்செயலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கே.கார்த்திகேயன், இ.கா.ப. காவலர் செல்வகணேஷ்யை வெகுவாக பாராட்டினார்.

No comments
Thank you for your comments