எல்ஐசி வலைதள முகப்பு பக்கம் இந்தியில் மாற்றப்பட்டது கண்டனத்துக்குரியது - தொல்.திருமாவளவன் கண்டனம்
காஞ்சிபுரம்,நவ.19:
காஞ்சிபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி விமல்ராஜ் இல்ல விழாவிற்கு வருகை தந்த தொல். திருமாவளவன் இது குறித்து மேலும் கூறியது.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி முகப்பு வலைதளம் ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை மீண்டும் ஆங்கிலத்திற்கே மாற்றப்பட வேண்டும்.இச்செயல் கண்டனத்துக்குரியது.மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
மக்களவையின் தொடக்க நாளிலேயே உறுப்பினர்களுக்கு அளித்த சுற்றறிக்கை இந்தியில் இடம் பெற்றிருந்தது.பின்னர் அதனை கடுமையாக கண்டித்த பிறகே ஆங்கிலத்துக்கு சுற்றறிக்கையை மாற்றினார்கள்.
அனைத்து மொழி பேசுபவர்களுக்கும் புரியும் வகையில் எல்ஐசியின் முகப்பு இணையப்பக்கம் அமைந்தாலும் சிறப்பாக இருக்கும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments