Breaking News

சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

காஞ்சிபுரம், நவ.3:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளையின் சாப்லி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வரும் 12ஆம் தேதி சென்னையில் அமைப்பின் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காஞ்சிபுரம் கிளை சார்பில் குன்றத்தூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அமைப்பின் மாநில துணைத் தலைவர் தாவூத் கைசர் கலந்து கொண்டு தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.

மாவட்ட செயலாளர் அஷரப் அலி,மாவட்ட பொருளாளர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிளை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் அதில் காஞ்சிபுரம் கிளையிலிருந்து திரளானவர்கள் பங்கேற்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments

Thank you for your comments