காணாமல் போகப் போகும் குதிரை வண்டி சவாரி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரம் கோவில்கள் நிறைந்த பகுதி என்பதனால் வெளிநாடு வெளி மாநில பக்தர்கள் வருவார்கள். பல்வேறு கோவில்களுக்கு சென்று வர இன்றைய ஷேர் ஆட்டோ போல முன்பெல்லாம் பயன்படுத்தியது குதிரை வண்டி சவாரி தான்
காஞ்சிபுரம் நகரப் பகுதியில் மட்டும் ஏழு குதிரை வண்டி ஸ்டாண்ட் 200க்கும் மேற்பட்ட குதிரை வண்டி இருந்தது வாகனங்கள் அதிகமானதால் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலில் குதிரை வண்டியை இயக்க முடியவில்லை என கூறுகிறார் குதிரை வண்டிக்காரர் சர்தார்.
4 பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலான வண்டி அமைப்பு செலவில்லாத சாக்குப் பைகள் இருக்கை குஷன் சுகத்தைக் கொடுக்கும்.
ஒரு காலத்தில் மிராசு தார்கள் ஜமீன்தார்களுக்கு மட்டுமே இருந்த குதிரை வண்டிகளை சாமானிய மக்களையும் வண்டியில் வலம் வர வைத்தது வாடகை குதிரை வண்டிகள் தான்.
தற்போது மெல்ல மெல்ல குதிரையின் ஓட்ட சத்தம் சாலையில் குறைந்து வருவது தான் நிதர்சனமான உண்மை. இதனால் குதிரை வண்டிக்காரர்கள் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி வருகிறது...

No comments
Thank you for your comments