Breaking News

மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி - கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சந்தாங்கலில் இன்று (13.11.2024) மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11.11.2024 முதல் மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் வயலில் சாகுபடி செய்துள்ள பயிர்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இப்பணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் உள்ள 519 வருவாய் கிராமங்களில் 1,16,323 சர்வே எண்கள், 11,07,628 உப சர்வே எண்களை வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, விதைச்சான்றுத்துறை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரி மாணவர்களை கொண்டு மின்னணு பயிர் சாகுபடி கணக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரி மாணவர்களுக்கு இப்பணி மேற்கொள்வது குறித்து முன்கூட்டியே பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் வாலாஜாபாத் வட்டம், விச்சந்தாங்கல் கிராமத்தில்  வேளாண்மை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள், தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரி மாணவ, மாணவியர்களை கொண்டு மின்னணு பயிர் சாகுபடி மதிப்பீடு கைபேசி செயலி வாயிலாக பதிவேற்றம் செய்யும் பணியினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, உரிய காலத்தில் பணிகளை செயல்படுத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வின் போது அறிவுரை வழங்கினார்கள்.

இவ் ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் (பொ) திரு. ரா. ராஜ்குமார், வேளாண்மை துணை இயக்குநர் (திட்டங்கள்) திருமதி. கிருஷ்ணவேணி, திட்டப்பணிகள்  மேற்கொள்ளும் அலுவலர்கள் / மாணவர்கள் உடனிருந்தனர்.

 

No comments

Thank you for your comments