Breaking News

சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயம் - இணைப்பதிவாளர் தகவல்


காஞ்சிபுரம், நவ.6:

சிறந்த கூட்டுறவுச் சங்கம் அல்லது வங்கிக்கு நடைபெறவிருக்கும் கூட்டுறவு வார விழாவில் கேடயம் வழங்க இருப்பதால் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ புதன்கிழமை கேட்டுக்கொண்டார்.


கூட்டுறவு வார விழா வரும் நவ.14 முதல் நவ.20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இவ்விழாவில் கூட்டுறவுச் சங்கங்களால் ஏற்படும் பலன்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம். 

நிகழாண்டுக்கான 71 வது கூட்டுறவு வார விழாவில் சிறப்பாக செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.எனவே தகுதியான சங்கத்தினை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்கான படிவங்களை காஞ்சிபுரம் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள் தங்களுடைய இணையதள தரவு தளத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டுறவு நிறுவனங்கள் வாரியாக பதிவு செய்யப்பட்ட விபரங்களை பரிசீலித்து ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சங்கம் அல்லது ஒரு வங்கியை தேர்வு செய்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு பரிந்துரைக்கப்பட இருப்பதாகவும் பா.ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

No comments

Thank you for your comments