Breaking News

பொறியியல் படிக்கும் மாணவர்கள் தொழிற்சாலைகளின் செயல்பாடுகளை பார்வையிடுவதும் அவசியம் - அண்ணா பல்கலை இயக்குநர் பேச்சு

காஞ்சிபுரம் :

கல்லூரிகளில் பொறியியல் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் படித்துக் கொண்டிருக்கும் போதே தொழிற்சாலைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என சென்னை அண்ணா பல்கலையின் இயக்குநர் பி.ஹரிஹரன் புதன்கிழமை பேசினார்.


காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்புக் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் மாணவர்களின் தொழில் நுட்ப திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது என்றார்.

விழாவிற்கு ஹெச்.எல்.மான்டோ ஆனந்த் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் முன்னிலை வகித்தார்.இத்திட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து வசதி, இருப்பிடம் ஆகிய அனைத்தையும் தமது நிறுவனமே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்திய சென்னை அண்ணா பல்கலையின் இயக்குநர் பி.ஹரிஹரன் பேசுகையில் 

பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தொழிற்சாலைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.  மேலும் ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தின் நன்மைகளையும் விரிவாக விளக்கி பேசினார்.அண்ணா பல்கலையின் உறுப்புக் கல்லூரி முதல்வர் வி.கவிதா வரவேற்றுபேசினார்.

விழாவில் ஹெச்எல் மான்டோ நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள்,பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் எம்.துரையரசன்,ஜி.அருண் விஜய் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments