Breaking News

திருவேற்காடு நகராட்சியில் நோய் தொற்று ஏற்படும் அவல நிலை - ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய சுகாதார முறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

திருவேற்காடு நகராட்சியில் நிலவி வரும் சுகாதாரமற்ற அவல நிலையை மாற்ற உடனடி நடவடிக்கை அவசியமாகிறது. 


திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அருகே உள்ள இந்த நகராட்சி, குப்பைகளால் முற்றிலும் சூழப்பட்டுள்ளதால், மக்கள் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். சுகாதாரத் துறை அமைச்சர் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தாலும், நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைக்காதது மக்களுக்கும் அரசுக்கும் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நகராட்சி பகுதிகளில் குப்பைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு குவிந்துள்ளதால் மழை நேரங்களில் குப்பை மீது மழை நீர் சேர்ந்து சாலைகளில் பரவி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. 

இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதோடு, மாடுகளும் குப்பைகளை கலைத்து நடுரோட்டில் விடுகின்றன. நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும், ஒப்பந்ததாரர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சுகாதாரத்திற்கான பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 மெத்தனமாக செயல்படும் அதிகாரிகளால் அரசுக்கும் அவபெயர் மக்களுக்கும்  பாதிப்பும் ஏற்படுகிறது.  இதற்கான தீர்வாக செயலாற்றாத  அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் 

ஆணையரிடம் புகார் அளித்தால் மாதம் மாதம் 40 லட்சத்துக்கு மேல் பில்லு போடும்  ஒப்பந்ததாரர்களிடம் பலமுறை கூறியும் எந்தப் பணியும் செய்வதில்லை என்று புலம்பி வருகிறார் 

இந்நிலையை மாற்ற, உடனடியாக ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய சுகாதார முறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்.

No comments

Thank you for your comments