துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டுகூடலூர் நகராட்சியில்ஆணழகன் 2024 மற்றும் பளு தூக்கும் போட்டிகள் !
கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதியில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திமுகவின் இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் இந்தியன் பிட்னஸ் பெடரேசன் ஆகியவை இணைந்து நடத்தும் 5வது மிஸ்டர் உதயநிதி கிளாசிக் என்ற தலைப்பில் 2024 ஆம் ஆண்டின் ஆணழகன் மற்றும் பளு தூக்கும் போட்டி அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கினார். கூடலூர் நகர செயலாளர் அ.அறிவரசு வரவேற்பு உரையாற்றினார். நிகழ்ச்சியை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பா.விக்னேஷ் குமார் சிறப்பு ஏற்பாட்டுடன் ஒருங்கி ணைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹக்கீம் மற்றும் துணை அமைப்பாளர்கள் நாகராஜ்,அருணாச் சலம்,சூரியன் தம்பி, உதயநிதி பாபு, மனோஜ் முன்னிலை வகித்தார்கள். போட்டிகளை தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை மேற்கு கொன்றிய செயலாளர் சு.சுரேந்திரன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம் தொகுதி பார்வையா ளர் மு.ஜெயக்குமார்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி.குரு பிரசாத், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் கணேஷ் மூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் குணசேகரன் ஆகியோர் குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார்கள்.
இப்போட்டிகளில் பல்வேறு மாநில மாவட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் போட்டியாளர்கள் வயது மற்றும் எடை வித்தியாசங்களுக்கு ஏற்ப பல்வேறு பிரிவு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், நினைவு பரிசு சிலைகள், காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் என வெற்றிக்கேற்ப பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அசோக் பாபு ஆறு குட்டி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments