Breaking News

கைப்பந்துப் போட்டியில் சங்கரா பல்கலை மாநில அளவில் 2 வது இடம்

காஞ்சிபுரம்,நவ.5:

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை 2 வது இடம் பெற்றமைக்கு பல்கலையின் துணைவேந்தர் நினைவுப்பரிசு வழங்கி செவ்வாய்க்கிழமை பாராட்டினார்.


முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் திருச்சியில் நடைபெற்றது.இப்போட்டியில் காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா எனப்படும் சங்கரா பல்கலையின் மாணவியர்கள் 2 வது இடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவியரை பல்கலையின் துணைவேந்தர் ஜி.சீனிவாசு பாராட்டி நினைவுப் பரிசும் வழங்கினார். இந்நிகழ்வில் பல்கலையின் பதிவாளர் ஸ்ரீராம், டீன் வெங்கட்ராமன்,உடற்கல்வி இயக்குநர் குணாளன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments