காஞ்சிபுரத்தில் இலவச பொது மருத்துவ முகாம்
காஞ்சிபுரம்
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை,காஞ்சிபுரம் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டளை,காஞ்சிபுரம் லைப்கேர் மருத்துவமனை மற்றும் குமார் கண் மருத்துவமனை,இந்திய பல் மருத்துவச் சங்கம் காஞ்சிபுரம் கிளை ஆகியனவற்றுடன் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அனைத்து ரோட்டரி சங்கங்களும் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை நடத்தினார்கள்.காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மருத்துவ முகாமை தொடக்கி வைத்து பேசியதுடன் முகாமையும் பார்வையிட்டார்.
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையின் இதயவியல் பேராசிரியர் எஸ்.நாகேந்திர பூபதி தலைமை வகித்து அவரது குழுவினர் இதயநோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் லைப்கேர் மருத்துவமனையின் இயக்குநர் தி.அன்புச்செல்வன், பல்லவன் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் டிஜிபி மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க தலைவர் எஸ்.பிரகாஷ் வரவேற்று பேசினார். கண் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் பல் மருத்துவ பரிசோதனைகளும்,பல் மருத்துவர் கணேஷ் தலைமையில் பல் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
முகாமில் ரத்த பரிசோதனை, இதயநோய் அறிகுறிகளை தெரிவிக்கும் இசிஜி மற்றும் எக்கோ கருவிகள் மூலம் பரிசோதனைகள் ஆகியனவும் இலவசமாக வழங்கப்பட்டது.
முகாமில் 143 பயனாளிகள் மருத்துவ ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் பெற்று பயனடைந்தனர்.முகாம் தொடக்க விழாவில் ரோட்டரி சங்க தலைவர்கள் ஆர்.கமலேஷ், பி.சதீஷ்குமார், ஜி.ஜெயகோபி, டி.ஞானசேகரன்,ஏவி பாஸ்கரன் ஆகியோர் உட்பட சங்க செயலாளர்கள்,நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments