தீபாவளி பண்டிகையை மக்கள் சிரமம் இல்லாமல் கொண்டாட பாதுகாப்பு ஏற்ப்பாடு - ஆவடி காவல் ஆணையரகம்
ஆவடி :
தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடைகள், நகைகள், பட்டாசுகள் ஆகிய பொருட்களை வாங்குவதற்காக கடைவீதிகள், மார்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மார்கெட் பகுதிகள், கடை வீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அதிகளவில் காவலர்களை நியமித்து கண்காணிக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் முக்கிய இடங்களில் போலீசாரால் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் சென்று வருவதை பாதுகாப்பாக உணரும் வகையிலும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் இரவு ரோந்து காவல்களை அதிகப்படுத்தி தீவிர காண்காணிப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சிரமம்மின்றி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க வசதியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட முக்கிய பேருந்து நிலையங்களான பூந்தமல்லி, செங்குன்றம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சாலைகளில் போக்குவரத்து போலீசாரால் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் அவர்கள் தெரிவித்தார்
No comments
Thank you for your comments