06.11.2024 அன்று கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் பொது ஏல விற்பனை
ஆவடி :
ஆவடி காவல் ஆணையாகம் ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் உள்ள காவல் வாகனங்களான (Tata Victa – 2, Tata Spacio-2, Grande-01, Tempo Traveller-01 & Motor cycle -17) என மொத்தம் 23 வாகனங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலமும் தூரமும் கடந்து முதிர்ந்த நிலையில் அரசு மத்திய தானியங்கி பணிமனையின் மூலம் கழிவு நீக்கம் செய்யப்பட்டது. இவ்வாகனங்கள் பொது ஏலம்விட ஏலக்குழு தலைவர், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு) அவர்களின் முன்னிலையில் 06.11.2024 அன்று காலை 09.00 மணியளவில் ஆவடி காவல் ஆணையரகம் ஆயுதப்படை மைதானத்தில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு நாள் 01.11.2024 முதல் 05.11.2024 வரை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை ஆவடி காவல் ஆணையரக, ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவு அலுவலகத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஏலத்திற்கு முன்பதிவு செய்ய வரும் நபர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் GST பதிவெண் கொண்ட சான்றுடன் LMV வாகனங்களுக்கு ரூ.5000/- மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2000/- EMD (Refundable Deposit) செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் முன்பதிவு செய்த ஏலதாரர்களை மட்டும் தான் பகிரங்க ஏலத்திற்கு ஏலக்குழுவினர் முன்னிலையில் அனுமதிக்கப்படுவார்கள்.
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகையில் அன்றைய தினமே 75% தொகையை செலுத்த வேண்டும் மீதமுள்ள ஏலத்தொகையான 25% தொகை மற்றும் GST இரசீதுடன் மறுநாள் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது
No comments
Thank you for your comments