காஞ்சிபுரம் செவிலியர் கல்லூரியில் நவராத்திரி திருவிழா தொடக்கம் - சங்கராசாரியார் சுவாமிகள் நடத்துகிறார்
காஞ்சிபுரம்,அக்.1:
இது குறித்து சங்கரா செவிலியர் கல்லூரியின் தலைவர் பம்மல்.விஸ்வநாதன்,முகாம் மேலாளர் ஜானகிராமன், சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரத்தை அடுத்த நல்லூர் கிராமத்தில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட சங்கரா செவிலியர் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.நாளை முதல் கல்லூரி வளாகத்தில் சரன் நவராத்திரி திருவிழா தொடங்கி வரும் அக்.13 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி சங்கராசாரியார் சுவாமிகள் மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீசுவரர் பூஜை தினசரி நடத்துவதோடு நவராத்திரி நாட்களில் நவ ஆவர்ண பூஜையும் நடத்துகிறார்.மேலும் நவராத்திரி திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்காக கல்லூரி வளாகத்தில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு அதில் உலக நன்மைக்காக ஸ்ரீ வித்யா ஹோம்,சண்டி ஹோமம்,ருக்சம்ஹிதா ஹோமம் ஆகியனவும் நடைபெறுகிறது.
நவராத்திரி நாட்களில் தினசரி இரவு கல்லூரி வளாகத்தில் முதல் 3 நாட்கள் பொம்மலாட்டம் மற்றும் பிற நாட்களில் பக்தி இன்னிசைக் கச்சேரிகள் ஆகியனவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளதாகவும், பக்தர்கள் விழாவில் கலந்து திருவருளும், குருவருளும் பெற்றுச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.
No comments
Thank you for your comments