கோதவாடிக்கு புதிய பேருந்து 33c
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் கோதவாடி ஊராட்சிக்கு புதிய அரசுப் பேருந்து 33c ரயில் நிலையம் to கோதவாடிக்கு சேவை அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சுவாமி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஒன்றிய செயலாளர் காட்டம்பட்டி கதிர்வேல், உக்கடம் கிளை மேலாளர் ராஜேந்திரன் ஆகியோருக்கு கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கோதவாடி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, கோதவாடி பேருந்து நிறுத்தத்தில் வந்த அரசுப் பேருந்து 33c ஓட்டுனர் சுரேஷ் மற்றும் நடத்துனர் தயாளன் அவர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வி, பொது கிளை செயலாளர் இளங்கோவன், 4வது வார்டு உறுப்பினர் சிவக்குமார், வார்டு உறுப்பினர்கள் செல்வி, கனகராஜ், சம்பத், தூய்மை காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments