Breaking News

காஞ்சிபுரத்தில் 276 ஜெசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன - அமைச்சர் ஆர்.காந்தி

காஞ்சிபுரம், அக்.14:

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 276 ஜெசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக கைத்தறித்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆர்.காந்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

சென்னை வானிலை மைய அறிவிப்பின்படி வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.பருவமழை தொடர்பான பேரிடர்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கைத்தறித்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆர்.காந்தி காஞ்சிபுரத்தில் உள்ள அரசின் பயணியர் விடுதியில் ஆட்சியர்,எம்பி,எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் அவர் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்திருப்பதால் வடகிழக்குப் பருவமழையால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் வரதராஜபுரம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.அங்கு 24 மணி நேரமும் அரசு அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 276 ஜெசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாடு அறையும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.அ

மைச்சரது பேட்டியின் போது ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், எஸ்.பி.கே.சண்முகம், காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், சார்ஆட்சியர் ஆசிப்அலி உட்பட அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments