காஞ்சிபுரத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு - ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம்,அக்.14:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு எஸ்பி கே.சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தெரிவித்ததாவது..
வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரையின்படி வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ,தீயணைப்புத்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை சார்ந்த அரசு அலுவலர்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பேரிடர் காலங்களில் மக்கள் மாவட்ட நிர்வாகத்தை சுலபமாக தொடர்பு கொள்ளவும்,தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்குதல்,கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பருவமழை இடர்ப்பாடுகள் பற்றிய புகார்களை தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் மற்றும் சமூக வலைத்தளம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண் - 044- 27237107 அல்லது வாட்ஸ் அப் எண்: 80562 21077 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். டுவிட்டர், இன்ஸ்டாகிராம் கைபேசி செயலிலும் தெரிவிக்கலாம்.
பருவமழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் தன்னார்வலர்கள் உள்ளூர் பொதுமக்கள் அரசு அலுவலர்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட நிர்வாகத்தினால் வெளியிடப்படும் அதிகாரப் பூர்வ செய்திகளை பச அகஉதப என்ற செயலி மூலமும் பொதுமக்கள் பின் தொடரலாம்.வடகிழக்குப் பருவமழை தொடர்பான தேவையில்லாத வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.எந்த வித பாதிப்புகளும் ஏற்பட்டு விடாதவாறு அனைத்து துறை அரசு அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments