Breaking News

அக்.15 தற்காலிகமாக பட்டாசுக்கடைகள் வைக்க விண்ணப்பிக்க கடைசி நாள் - ஆட்சியர் அறிவிப்பு

 


காஞ்சிபுரம் :

தீபாவளிப் பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுக்கடைகள் வைக்க விரும்புவோர் இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



செய்திக்குறிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்,

இ.சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் வரும் அக்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கடை அமைவிட சாலை வசதி, கடையின் பரப்பளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையில் வரைபடம், கடை வைக்க உத்தேசிக்கப் பட்டுள்ள வரைபடம், சொந்தமாக இடம் இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்தபத்திரம் ,உரிம கட்டணம் ரூ.500 அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான அசல் ரசீது, மனுதாரரின் அடையாள அட்டை, இரு பாஸ்போட் சைஸ் புகைப்படம் ஆகியனவற்றை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தி விசாரணை முடிவு பெற்றவுடன் இணைய வழியிலேயே தங்களுடைய மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற விபரத்துடன் தற்காலிக உரிமம் வழங்கப்படும்.

அதனை இ.சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த உரிமம் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்க தற்காலிக உரிமம் ஆகும்.

நிரந்தரமாக பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கும் இவ்வழிமுறை பொருந்தாது என்ற விபரம் தெரிவிக்கப்படுவதாகவும் ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments