Breaking News

கோவை மாவட்டம், வடக்கலூர் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் ஊராட்சி ஒன்றியம், வடக்கலூர் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் மூக்கனூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. 



கூட்டத்திற்கு மயில்சாமி தலைமை தாங்கினார்.  ஊராட்சி தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். 

ஊராட்சி செயலர் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார் . இக்கூட்டத்தில் சமூக தணிக்கை செய்யும் அதிகாரிகள் கனகராஜ், பற்றாளர் கலந்து கொண்டு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 2016 - 2017 முதல் 2021- 2022 ஆண்டுகள் வரையிலான பயனாளிகளை ஆய்வு செய்து அதற்கான நிலைப்பாடுகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (2005) கீழ் வேலை உறுதி திட்டம் நடப்பு நிதியாண்டில் 2023 முதல் 2024 வரை நடைப்பெற்ற பணிகள் கூட்டத்தின் முன் சமூக தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பித்து வாசிக்கப்பட்டது. 

உடன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments