காஞ்சிபுரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்திய சிறுவன்!
காஞ்சிபுரம், செப்.1:
காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் கருணையின் வடிவம் கந்தன் என்ற தலைப்பில் சென்னையை சேர்ந்த 7 வயதுச் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை முருகனின் வரலாற்றை ஆன்மீகச் சொற்பொழிவாக நிகழ்த்தி அனைவரது பாராட்டையும் பெற்றார்.
காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் தமிழர்களின் கலை,கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை கற்றுத்தரும் இடமாக திண்ணைப்பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கல்விக் கண்காட்சி,ஆன்மீக சுற்றுலா ஆகியனவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
திண்ணைப்பள்ளிக்கூடம் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள பத்ம சேஷாத்திரி மில்லினியம் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் மாஸ்டர். வைபவ். மகேஷ்(7) தந்தை மகேஷ், தாயார் பரணி ஆகியோரின் மகனான இவர் கருணையின் வடிவம் கந்தன் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தனது மழலைப் பேச்சால் முருகப் பெருமானின் வரலாற்றை கூறிய விதத்தை பலரும் வியந்து பாராட்டினார்கள்.இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஏற்பாட்டினை காஞ்சிபுர் சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

No comments
Thank you for your comments