Breaking News

காஞ்சிபுரத்தில் தட்டச்சுத்தேர்வு - 5627 பேர் எழுதினார்கள்

காஞ்சிபுரம்,செப்.1:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற தட்டச்சுதேர்வினை மொத்தம் 5627 பேர் எழுதினார்கள். 



தமிழகம் தொழில் நுட்பக் கழகம் சார்பில் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் மூலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் தட்டச்சுத் தேர்வு நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பக்தவத்சலம் பாலிடெக்னிக்,சோழன் மெட்ரிக்குலேசன் பள்ளி, பல்லவன் பாலிடெக்னிக், உத்தரமேரூர் மீனாட்சி கல்லூரி மற்றும் தூசி பாலிடெக்னிக் ஆகிய 5 இடங்களில் தட்டச்சுத் தேர்வு நடைபெற்றது. தேர்வினை காஞ்சிபுரத்தில் 5138 பேரும்,உத்தரமேரூரில் 489 பேர் உட்பட மொத்தம் 5627 பேர் தேர்வினை எழுதினார்கள்.தேர்வானது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்களில் இளநிலை தட்டச்சுத் தேர்வு மற்றும் முதுநிலை தட்டச்சுத்தேர்வு என இரு பிரிவுகளாக நடந்தன.

தேர்வு நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்ப்பட்டது. இது தவிர 20 கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு தேர்வு மையத்தை கண்காணித்தனர். 

தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் காஞ்சிபுரம் மாவட்டதலைவர் விஜயசந்திரன்,தட்டச்சு பயிலக உரிமையாளர் சங்க நிர்வாகி டில்லிபாபு ஆகியோரும் தமிழகம் தொழில் நுட்பக் கழகத்தினருடன் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments