Breaking News

பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் திட்டத்திற்கு நிலம் வழங்குவதற்கு ஆட்சேபனை

 காஞ்சிபுரம்

பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் திட்டத்திற்கு நிலம் வழங்குவதற்கு ஆட்சேபனை .

நிலம் எடுப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் விமான நிலைய திட்ட நிலம் எடுப்பு  அலுவலகத்தில் ஆட்சேபனை மனு வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


கிராமப்புறங்களில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகளை நாளிதழ்களின் வெளியிட்டு நிலம் எடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் விலை நிலங்கள் குடியிருப்புகள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படக்கூடிய ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறுபட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள 900 ஏக்கர் நிலங்களை எடுக்க நிலை எடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து  ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காரை பகுதியில் உள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகம் மண்டலம் என்ற இரண்டில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நிலம் வழங்க மாட்டோம் என ஆட்சேபனை மனுக்களை வழங்கி வருகிறார்கள்.

கிராம மக்கள்  வருகையை ஒட்டி காரை பகுதியில் உள்ள நிலை எடுப்பு அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments