தீபாவளி முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை - காஞ்சிபுரம் ஆட்சியர் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விற்பனையை தொடக்கி வைத்த பின்னர் கூறியதாவது..
கோ.ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளிப் பண்டிகைக்காக பாரம்பரியம் மிக்க நெசவுத் தொழிலில் நவீன யுக்திகளைக் கையாண்டு அரிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணக் கலவையில் பட்டு மற்றும் கைத்தறிச் சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.புதிய வடிவமைப்பில் ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில், நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டு முதல் புதிய வரவுகளாக ட்வீல் வீல் ஆயத்த சட்டைகள்,காம்பிரே ஆயத்தப் போர்வைகள்,ஸ்லைப் காட்டன் சட்டைகள்,டிசைனர் காட்டன் சேலைகள்,காம்பிரே போர்வைகள்,டிசைனர் கலெக்சன் போர்வைகள் ஆகியனவும் விற்பனைக்கு உள்ளது.
இந்தியாவின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிக்காக அனைத்து கோ.ஆப்டெக்ஸ் நிறுவனங்களிலும் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியுடன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு வேலூர் கோ.ஆப்டெக்ஸ் மண்டலத்தில் 7.08 கோடி விற்பனையானது.
இந்த ஆண்டுக்கு கோ.ஆப்டெக்ஸ் வேலூர் மண்டலத்துக்கு விற்பனை இலக்கு ரூ.8.50 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.காமாட்சி கோ.ஆப்டெக்ஸ் காஞ்சிபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு 73.28 லட்சம் விற்பனையானது.இந்த ஆண்டுக்கு ரூ.1.15 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
தொடக்க விழாவிற்கு காஞ்சிபுரம் எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் கோ.ஆப்டெக்ஸ் மேலாளர் எஸ்.பெருமாள் வரவேற்று பேசினார்.
விழாவில் கோ.ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் க.நந்தகோபால்,வேலூர் மண்டல மேலாளர் சு.ஞானப் பிரகாசம் ,கூட்டுறவுச்சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் ஊழியர்கள் தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments