Breaking News

செப்.13ல் கூட்டுறவுச்சங்க பணியாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம், செப்.9:

காஞ்சிபுரம் மண்டல அளவில் பணியாற்றும் கூட்டுறவுச்சங்க பணியாளர்களின் குறை தீர்க்கும் கூட்டம் வரும் செப்.13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருப்பதாக கூட்டுறவுச் சங்க மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ  திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாது, 

கூட்டுறவுச்சங்கங்களில் பணிபுரிவோரின் குறைகளை தீர்வு காணும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர்களின் குறைகள் தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை செப்.13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பாக குறைகள் இருப்பின் தெரிவித்து பயன் பெறலாம். 

மேலும் பணியின் போதும் வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்களை அளித்திடலாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

No comments

Thank you for your comments