பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா - 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம், தண்டலம் தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் இன்று (24.09.2024) நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி, 1000 மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய மரங்கள் குறித்த நூல் வெளியிட்டு, தெரிவித்ததாவது:
பசுமை தமிழ்நாடு இயக்கம் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டின் பசுமை பரப்பை தற்போதுள்ள 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டது. பசுமை தமிழ்நாடு இயக்கம் இரண்டாம் ஆண்டு விழா நாம் எல்லோரும் சேர்ந்து இக்கல்லூரியில் கொண்டாடுவது நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னெடுப்பான பசுமை தமிழ்நாடு இயக்கம் ஒரு மக்கள் இயக்கம் என்பதற்கான சான்று ஆகும். தற்போதுள்ள காலநிலை மாற்றம் திடீர் திடீர் மாற்றங்களுடன் அதிகப்படியான வெப்பம் அதிகப்படியான மழை, வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற பேரழிவுடன் கூடிய இயற்கைச்சீற்றங்கள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளதால் மரம் நடும் பணி ஒரு அறப்பணி என்பதற்கேற்பவும் மேற்கண்ட காலநிலை மாற்றத்தினை மட்டுப்படுத்தும் மிகப்பெரும் உன்னதமான பணியை பசுமை தமிழ்நாடு இயக்கம் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும். நமது முதலமைச்சர் அவர்கள் நமது மாநிலத்தின் மக்களையும் மண்ணையும் காக்கும் விதமாக பல்வேறு தொலைநோக்கு திட்டங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டம் ஒரு மைல்கல் திட்டம் ஆகும்.
மரங்கள் வளர்ப்பது என்பது அதுவும் வேளாண்மை நிலங்களில் உழவு தொழிலுக்கு குந்தகம் இல்லாமல் உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவது போற்றத்தக்கது ஆகும். மரம் வளர்ப்பதால் பல்லுயிர்களும் பாதுகாக்கப்படுகிறது. எனவே, மரங்கள் பல்லுயிர்களின் பாதுகாவலன் என்றே கூறலாம். ஆகையால் தற்போது தொழிற்சாலைகளின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்தினை ஈடுசெய்யும் விதமாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு மரம் நடும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தேவையான நிதி ஆதாரம் 135.12 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 7 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. மரம் நடும் பணிகளில்
அனைத்துத் துறைகளையும், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரி மாணவ / மாணவியரை பங்கேற்க செய்வது உள்ளபடியே ஒரு பாராட்டுக்குரியதாகும். எனவே பசுமை தமிழ்நாடு இயக்கம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெற்றி நடைபோடுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தற்போது பெருகி வரும் நகர்மயமாதல், வாகனப்பெருக்கம் ஆகியவற்றினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே தான் மரம் வளர்ப்பதன் மூலம் பசுமையாக்கல் பணி இன்றியமையாததாக ஆக்கப்படுகிறது. மேலும் கார்பன் படிவு, தேக்கம், நேரடியாக உயிரினங்களையும், மக்களை பாதிப்படையச்செய்கிறது. இதற்காகத்தான் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
..2..
/2/
அவ்வாறாக கார்பன் வரவு திட்டம் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மத்திய அரசு சுற்றுப்புறம் வனம் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் 100 பகுதிகளில் சுமார் 2000 Ha பரப்புக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,மரம் வளர்ப்பு மூலம் கார்பன் வரவு என்ற மறைமுக நிதி வரவு ஈட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 2023-2024ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வாழ்விட மேம்பாட்டுக்காக உயிர் அரண் அமைத்தல் திட்டத்தின் படி சதுப்பு நிலங்கள் தேர்வு செய்து சதுப்பு நில தாவரங்களான அவிசீனியா, ரைசோபோரா போன்ற தாவரங்கள் நடவு செய்து சுமார் 360 Ha பரப்பில் புதிய இடங்களில் சதுப்பு நிலக் காடுகள் உருவாக்கப்பட்டும் மேலும் 700 Ha பரப்பில் ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருந்ததை சதுப்புநில காடுகள் மீட்டு உருவாக்கம் செய்தும் இத்துடன் இல்லாமல் 160,000 எண்ணிக்கை நம் மாநிலத்தின் மரமான பனை மரங்கள் நடவு செய்தும் மேலும் 180 Ha பரப்பில் சவுக்கு மரத்தோட்டங்கள் கடலோர பகுதிகளில் உற்பத்தி செய்தும் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பு செய்யும் நடவடிக்கைகளும் சுற்றுப்புறம் மற்றும் காலநிலை மாற்றத் துறை நிதி உதவியுடன் பசுமை தமிழ்நாடு இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் உலக வங்கி உதவியுடன் நெய்தல் புரட்சி இயக்கம் (Tamil Nadu Coastal Mission) என்ற புதிய இயக்கம் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் 1076 கி.மீ. நீளம் கொண்ட கடலோர பகுதிகளை மேம்படுத்தும் விதமாக உலக வங்கி நிதி உதவி கோரி பிரேரணை ரூ.38.36 கோடிக்கு நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகையால் தமிழ்நாடு வனத்துறையுடன் சுற்றுப்புறம், காலநிலை மாற்றம் துறையும் இணைந்து இப்புவிப் பரப்பினை பசுமையாக்கும் பணிகள் காலநிலை மட்டுப்படுத்தும் பணிகள் கார்பன் வரவு போன்ற திட்டங்களும் செவ்வனே செயல்படுத்தப்பட்டு நமது மாண்புமிகு முதலமைச்சரின் இலக்கினை நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறது எனவும் மாண்புமிகு சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
விழாவில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சிறப்பு அஞ்சல் வில்லை வெளியிட்டு, தமிழ்நாடு வனத்துறை e-நர்சரி இணையதளத்தை துவக்கி வைத்தும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
பசுமை தமிழ்நாடு இயக்கம் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தற்போதுள்ள பசுமை பரப்பை தேசிய வனக் கொள்கையின்படி 33 சதவீதம் கொண்டு வரவேண்டும் என்ற உன்னத இலட்சியத்துடன் கடந்த செப்டம்பர் 24ம் நாள் 2022ம் ஆண்டு நமது மாண்புமிகு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் வேண்டுகோள்படி இதுவரை பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் 7307 எண்ணிக்கை தன்னார்வலர்கள், 32514 எண்ணிக்கை பொதுமக்கள், 3023 எண்ணிக்கை அரசு துறை அலுவலர்கள், 208 எண்ணிக்கை அறக்கட்டளைகள், 200 எண்ணிக்கை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் 433 இதரநிறுவனத்தினர் இணைய வழியாக இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இதற்கு சான்றாக இவ்விழாவினை முன்னெடுத்து யங் இந்தியா தன்னார்வல இளைஞர் இயக்கம் பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் கைகோர்த்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது எங்களுக்கு பெருமைபட வைத்தது.
இவ்வியக்கத்தின் வனத்துறை மட்டுமல்லாது இதர துறைகளையும் பங்கு பெற செய்தும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், தொழிற்சாலைகள் என அனைவரையும் உள்ளடக்கி மரக்கன்றுகள் நடும் பணியை ஊக்குவித்து ஒருங்கிணைக்கும் பணியை பசுமை தமிழ்நாடு இயக்கம் மேற்கொண்டு வருகிறது. நமது மாநிலத்தில் மரக்கன்று நடும் பணியான பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் திட்டத்தை நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக முன்னுரிமை வழங்கப்பட்டும் வருகிறது.
மரக்கன்றுகள் நடும் பணியானது காப்புக்காடுகள் மட்டுமல்லாது காப்புவனங்களுக்கு வெளியேயும் அதாவது விவசாய நிலங்கள், சமுதாய நிலங்கள், இதர துறை சார்ந்த இடங்கள், சாலையோரம், நீர்நிலைகரைகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலை இடங்கள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்று நடவு செய்யும் பணிகள் செவ்வனே இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் என அனைவராலும் இதுவரை சுமார் 7 கோடி மரக்கன்றுகள் நடவு செய்து சுமார் 1,25,000 Ha நிலப்பரப்பு பசுமையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் இடம் குறித்து விபரம், எண்ணிக்கை, செடி இனம் ஆகியவை புவிக் குறியீடு (geo tagging) செய்யப்பட்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் (www.greentnmission.com) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பசுமை தமிழ்நாடு இயக்கம் பணிகளை கண்காணிப்பு செய்யும் வகையில் மாவட்டம்தோறும் மாவட்ட
ஆட்சித்தலைவர் தலைமையில் இதரத்துறை அலுவலர்களை உள்ளடக்கி மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டு பெருமளவு மரக்கன்று நடும் பணிகள் ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் என மொத்தம் 2000 நர்சரிகளில் அனைத்து தரப்பினராலும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பருவமழையை பயன்படுத்தி நடவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை ஏழு கோடி மரக்கன்றுகள் அனைத்து இடங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கம் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்நாளில் அனைத்து மாவட்டங்களிலும் பசுமை தமிழ்நாடு நாள் இன்று மாண்புமிகு பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் மாவட்டந்தோறும் 1000 மரக்கன்றுகள் நடவு செய்து விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. ஆகையால் இன்று மாநிலத்தின் தலைமையகமான சென்னையில் பசுமை நிறைந்த இந்த தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவ / மாணவியர் மத்தியில் இவ்விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
எனவே நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கனவினை நிறைவேற்றிடும் வகையில் நாம் அனைவரும் கரம் கோர்த்து பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை ஒரு மாபெரும் ஒரு மக்கள் இயக்கமாக கொண்டு சேர்ப்போம் என கேட்டுக் கொள்கிறேன் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் முனைவர்.சுதான்ஷ/ குப்தா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (ம) உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் மற்றும் தலைமை இயக்குநர், பசுமை தமிழ்நாடு இயக்கம் (மு.கூ.பொ) திரு.தீபக் ஸ்ரீவஸ்தவா, இ.வ.ப., மாவட்ட வன அலுவலர் திரு. ரவி மீனா
No comments
Thank you for your comments