Breaking News

SDTU தொழிற்சங்கம் சார்பாக 6 அம்ச கோருதல் மற்றும் சின்னம் வெளியீட்டு விழா

 

கோவை மண்டலம் சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு வருகின்ற செப்டம்பர்  22-ம் தேதி  நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சின்னம் வெளியீட்டு விழா கோவை மாவட்ட கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ள எஸ்டிடீயு (SDTU) அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ரவூப்நிஸ்தார், கோவை மாவட்ட செய்தி தொடர்பாளர் மன்சூர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தெரிவித்ததாவது கோவை மண்டலத்தில் ஆயிரக்கணக்கான சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.இதனால் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.



மேலும் தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்சார கட்டணத்தை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி திரும்பபெற வேண்டும்.தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments