Breaking News

காஞ்சிபுரத்தில் திமுகவினர் அமைதிப்பேரணி, கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை






காஞ்சிபுரம், ஆக.7: 

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் நிர்வாகிகள் அமைதிப்பேரணியாக சென்று அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்கள்.


முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6 வது ஆண்டு நினைவு தினம் திமுக சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் பகுதியிலிருந்து அமைதிப்பேரணி நடைபெற்றது.


Also Read 🔥  ஆகஸ்ட் 8:  பல விதமான துன்பங்கள் நீங்கும்  நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ...    வழிபாட்டு முறை மற்றும் நேரம்


பேரணிக்கு கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவு மான க.சுந்தர் தலைமை வகித்தார்.எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியில் பங்கேற்ற பலரும் கறுப்புச்சட்டை அணிந்திருந்தனர்.பேரணி காந்தி சாலையில் தொடங்கி மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்து சேர்ந்ததும் அங்கிருந்த கருணாநிதியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பேரணியில் மாவட்ட துணைத்தலைவர் ஜெகன்னாதன்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் உட்பட மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், நகர,ஒன்றிய திமுக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments