Breaking News

காஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு முதலமைச்சர் பாராட்டு

காஞ்சிபுரம், ஆக.18:

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக கடன்கள் வழங்கியமைக்காக சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் பெண் தொழிலாளர்களுக்காக ரூ.706 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் புரிவதற்காக அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு விருது வழங்கினார்.

விருதினை மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் க.சிவமலர் பெற்றுக்கொண்டார்.

No comments

Thank you for your comments