கோவை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் ரங்கநாயகி
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நடைபெற்ற கோயம்புத்தூர் மாநகராட்சியின் - பதவிக்கான மறைமுகத் தேர்தலில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் தி.கே.ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு கட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்/மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்,
வெற்றிச்சான்றிதழ் மற்றும் செங்கோல் ஆகியவற்றை வழங்கி மேயருக்கான இருக்கையில் ரங்கநாயகி அவர்களை அமரவைத்தார்கள்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் -செல்வசுரபி, க.சிவகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments