பழமையான கற்பக விநாயகர் கோவில் முன்பு குட்டை போல் தேங்கி நிற்கும் கழிவு நீர் - பக்தர்கள் வேதனை
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு சுக்லா பாளையம் கோவிந்தன் தெருவில் 180 ஆண்டுகள் பழமையான கற்பக விநாயகர் கோவில் முன்பு குளம் குட்டை போல் தேங்கி நிற்கும் கழிவு நீர்
கடும் துர்நாற்றத்துடன் மழை நீருடன் சுமார் 2அடிக்கு மேல் கழிவு நீர் தேங்கி நிற்பதால் இன்று ஆடி அமாவாசை தினத்தன்று பொங்கல் வைத்து கூட இறைவனை வழிபட முடியவில்லையே என கடும் மன வேதனையிலுள்ள அப்பகுதி தெருவாசிகள்
மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திட கோரிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24வது வார்டு சுக்லா பாளையம் கோவிந்தன் தெருவில் சுமார் 180 ஆண்டுகள் பழமையான கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் நாள்தோறும் அப்பகுதி தெருவாசிகள் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இக்கோவிலுக்கு அருகாமையிலுள்ள புதை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாகவே கழிவு நீரானது புதை வடிகாலிலிருந்து வெளியேறி அப்பகுதியில் குளம் குட்டை போல் தேங்கி நின்று அசுத்துமாகவே காட்சியளிக்கின்றது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் அப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து சுமார் 2அடிக்கு மேல் தேங்கி நின்று வருவதால் அப்பகுதியே மிகுந்த துர்நாற்றமும் வீசி வருவதால் அப்பகுதி தெருவாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் பிரச்சினையால் தங்களக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் அப்பகுதி தெருவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அப்பகுதி தெருவாசிகள் சங்கட சதுர்த்தி அன்று கூட வணங்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்களும்,தெருவாசிகளும் கோவிலுக்குள் அந்த சாக்கடை தண்ணீரை மிதித்துக்கொண்டு உள்ளே வந்து கடவுளை வழிபட வேண்டிய அவல நிலை இருப்பதினால் கோவிலுக்கு யாரும் செல்லவில்லை, அதேபோல் இன்று பொங்கல் வைத்து கூட இறைவனை வழிபட முடியவில்லையே என அப்பகுதி தெருவாசிகள் கடும் மன வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினர் சர்மிளா மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவளித்த நிலையில் இப்பிரச்சினைக்கு இன்னமும் தீர்வுக் காணப்படவில்லை.
மேலும் இது சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அப்பகுதி தெருவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments