காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை... உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருவள்ளூர்:
தெரு ஓரம் விற்கப்படும் உணவுப் பொருட்கள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை காலாவதியான பொருட்களை அதிக அளவில் விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறனர்
அன்மைகாலமாக தெருவோரம் விற்கப்படும் பானிபூரி முதல் சிக்கன் 65 வரை தரமற்ற கேடுவிளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகின்றன.
அதேபோன்று மீன் மார்க்கெட்டில் பதப்படுத்தபட்ட பழைய மீன்கள், கெட்டுப்போன இறைச்சிகள், சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருட்கள் என உணவு பொருட்களில் தரம் கேள்வி குறியாகி வருகிறது என சமூச ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அவ்வப்போது அசம்பாவிதங்கள் நடைபெறும்போது, உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து காலாவதியான பொருட்கள், கெட்டுப்போன இறைச்சி-உணவுகள் என பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
ஆனால், தொடர்ச்சியான ஆய்வு, கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாததாலும், உணவின் தரம் கேள்வி குறியாகி வருகிறது. இதனால் சந்ததியினரின் நல்வாழ்வும் அச்சத்தில் உள்ளது.
இவைகளை உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான பொருட்கள் மற்றும் தரமில்லாத பொருட்களை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டனர்.
இது போன்ற பொருட்களால் மக்களின் நல்வாழ்வுக்கு பேராபத்தை விளைவிக்க கூடும் என்றும் தெரிவித்தனர்
No comments
Thank you for your comments