Breaking News

பள்ளி மாணவர்கள் படியில் பயணம் செய்யும் அவலம்! - எதிர்கால தலைமுறையினரை காக்கவேண்டியது கடமை -Dr கா.குமாரின் என் குரல்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் அவலம் தொடர்கதையாக இருந்து வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் அரசு பேருந்துகள், பள்ளி மாணவர்களுக்கு முக்கியமான பயண சாதனமாக இருந்து வருகிறது. குறிப்பாக, கிராமபுற மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும், திரும்பவும் இந்த பேருந்துகளை சார்ந்தே பயணம் செய்கிறார்கள். 

இருப்பினும், சமீபகாலமாக, அரசு பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் புறக்கணிப்பது போன்ற பிரச்சினைகள் அதிகமாகக் கேட்கின்றன. மிகவும் வருந்ததக்க நிலையாகும். இந்நிலை, வறுமையையும், கிராமபுற மாணவர்களையும் ஏளனப்படுத்தும் செயலாகும்.. இதற்கு நாம் வெட்கப்படவேண்டும்...

மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால், பள்ளிக்கு தாமதமாக செல்லாமல் இருக்கவும், மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.


படவிளக்கம்: நேற்று (புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் வேலூர் மாவட்டம், பாகாயம் வழியாக செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு  பயணம் செய்த காட்சி... தொடரும் அவல நிலை..  

பிரச்சினையின் அடிப்படைகள்:  

பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது பல நேரங்களில் ஒரு பேருந்தில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு செல்ல முடியாத நிலையை உருவாக்குகிறது. பல்வேறு மாவட்டங்களில் இதனால் மாணவர்கள் படியில் பயணிக்க நேரிடுகிறது, இது ஒரு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது. எதிர்கால சந்ததியினரின் நல் வாழ்க்கை கேள்விகுறியாகும்...

பேருந்துகளின் குறைபாடு:

சில நேரங்களில் பஸ் சரியான நிலைமையில் இல்லை.. பள்ளி நேரத்துக்கு போதுமான பேருந்து வசதியின்மையும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.  சில நேரங்களில், பேருந்து இயக்குநர்கள் மாணவர்களை ஏற்றிக்கொள்வதில் அலட்சியம் காட்டுவது. உரிய பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் தள்ளி அரசுப் பேருந்து நிறுத்துவதால் பள்ளி மாணவர்கள் ஓடி சென்று ஏறுவதற்குள் பேருந்து புறப்பட்டு செல்வது... மாணவர்கள் ஓடிச்சென்று ஏறி கீழே வீழ்வதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இது  போன்ற புகார்களும் தொடர்கதையாக உள்ளன..

நடவடிக்கை: 

மாணவர்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், மாணவர்கள் ஒழுங்காக ஏற்றப்படுகின்றனரா என்பதை ஆய்வு செய்ய  RTO  குழுக்கள் சாலைகளில் கண்காணிப்பு செய்யவேண்டும். 

கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அதிகமான பேருந்து சேவைகளை இயக்க வேண்டிய அவசியம். மாணவர்களை ஏற்றாமல், படியில் பயணம் செய்ய வைக்கும் பேருந்துகள் ஓட்டுநர், நடத்துநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க காலை, மாலையில் அலுவல் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

வேலூர் காட்பாடி அருகே  அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றபோது தவறி விழுந்ததது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தது என அடுக்கடுக்கான விபத்துகள் நடந்த போதிலும், 

கடந்த புதன்கிழமை மாலை 4 மணி அளவில் வேலூர் பாகாயம் வழியாக செல்லம் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பேருந்து படியில்  தொங்கி செல்லும் காட்சி மனதை  மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

இனியாவது அரசும், போக்குவரத்து துறையும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டு கடமையை செய்வதைவிட, எதிர்கால  தலைமுறையினரை காக்கவேண்டிய கடமை என உணர்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்வேண்டும் என்று நான்  வலியுறுத்துக்கின்றேன்... 

மேலும், பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும் என்று மாணவர்கள் மற்றும், பொதுமக்களுடன்  கோரிக்கையை முன்வைக்கின்றேன்.. 

No comments

Thank you for your comments