காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் மழை வெள்ளம் நீர் தடைப்படாமல் செல்ல சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் மழை வெள்ளம் நீர் தடைப்படாமல் செல்ல சுத்தம் செய்யும் பணி துவக்கம்.
பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன்,செடி கொடிகள் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியை நீர்வள ஆதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகள் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின் பேரில் நடைபெற தொடங்கி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகரின் மையப் பகுதியில் செல்லும் வேகவதி ஆற்றில் குப்பைகள் கொட்டப்படும், மரம் செடி கொடிகளும் முளைத்தும், மழை வெள்ள நீர் செல்ல தடையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அந்த வகையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேகவதி ஆற்றில் உள்ள குப்பைகள் செடி கொடிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நீர்வள ஆதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதி, வேலிங்கபட்டரை கீழ் கேட் பகுதி, மற்றும் முருகன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் வேகவதி ஆற்றை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் இருந்து முத்தியால்பேட்டை முருகன் காலனி வரையிலான ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு வேகவதி ஆற்றை சுத்தப்படுத்தி அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது என நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments