Breaking News

மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது சுவர் இடிந்து விழுந்து 9 சிறுவர்கள் பலி



சாகர் : 

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் பலியான நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தின் ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிலில் இன்று மத வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது கோயிலின் அருகே இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 9 சிறுவர்கள் பலியாகினர். 

இந்த விபத்தில் காயமடைந் தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் உடனடி யாக காவல்துறை, உள்ளூர் வாசிகள் இடிபாடுகளை அகற்றினர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன.

தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தீபக் ஆர்யா கூறினார்.

சுமார் 50 ஆண்டுகள் பழமையான இந்த வீடு, கனமழையால் இடிந்து விழுந்ததாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சாகர் பகுதி காவல் ஆணையர் வீரேந்திரா சிங் ராவத் கூறுகையில், 

“எங்களுக்குக் கிடைத்த தவலின்படி சாகர் மாவட்டம் ஷாபூரில் நடந்த ஹர்தல் பாபா மத நிகழ்வின்போது நிகழ்ச்சி நடந்த அரங்கின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுவரை 9 குழந்தைகள் உயிரிழந்ததும் உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களாவர்” என்றார்.

இந்நிலையில் விபத்து குறித்து முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், 

“விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவர வாழ்த்துகிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு சார்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் உத்தரப் பிரதேசத்தில் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.




No comments

Thank you for your comments