கன்டெய்னர் லாரியுடன் குட்கா பறிமுதல்
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகம், T12 பூந்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா பொருட்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் TN 02 BT 0384 என்ற பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்ததில், சாக்கு மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து லாரி ஓட்டுநரான விக்னேஷ் (வ/27) த/பெ முருகன், A.K.மோட்டூர், திருப்பத்தூரை சேர்ந்த இவரை கைது செய்து குட்கா பொருட்களை கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் சுமார் 10 டன் எடைக்கொண்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களுருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரியவந்ததையடுத்தும் மேலும் இதன் உரிமையாளர் மற்றும் யாருக்கு எடுத்துச் செல்ல இருந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைத்தனர்


No comments
Thank you for your comments